Thursday, August 8, 2013

அகவிலைப்படி கணக்கிடும் முறை!

மதுரை :- மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி,ஜூலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கும்.இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.கடைசியாக கடந்த ஜனவரி முதல் 72 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 8 சதவீதம் அதிகரித்து தற்போது 80 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர்.இனி கடந்த ஜூலை மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும்.இதற்கான ஏற்பாடுகளில் மத்திய அரசின் நிதித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதன்படி இம்மாத இறுதியில்,நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில்,மத்திய அரசு 10 சதவீத அகவிலைப்படியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்தொகையை ஜூலை முதல் நிலுவையாக வைத்து வழங்கும்.இதையடுத்து மாநில அரசும் 10 சதவீத அகவிலைப்படியை அதிகரித்து,செப்டம்பரில் அறிவித்து,அக்டோபரில் 3 மாத நிலுவையுடன் வழங்கும் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அகவிலைப்படி ணக்கீடு எப்படி?

ஊழியர்களின்
அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாகக் கிடைக்கிறது.இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது.அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர்.கடந்த 12 மாதத்தில்,தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியைக் கணக்கிட்டு,அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர்.அதில் கிடைக்கும் எண்ணை 100ஆல் பெருக்குவர்.அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர்.இதையே,அகவிலை
ப்படியாகக் கணக்கிடுகின்றனர்.உதாரணமாக கடந்த 12 மாதங்களின் சராசரி வருமாறு : நுகர்வோர் விலைப்புள்ளி 2012ல் ஜூலை 212,ஆகஸ்ட் 214,செப்டம்பர் 215,அக்டோபர் 217,நவம்பர் 218,டிசம்பர் 219 ;- பின் 2013ல் ஜனவரி 221,பிப்ரவரி 223,மார்ச் 224,ஏப்ரல் 226,மே 228,ஜூன் 231.இவற்றின் கூட்டுத்தொகை 2648.இதன் 12 மாத சராசரி 220.75.இதில் இருந்து 115.76ஐக் கழித்தால்,கிடைப்பது 104.99.இதை 100ல் பெருக்கக் கிடைப்பது 10,0499.இத்தொகையை மீண்டும் 115.76ஆல் கழித்தால் கிடைப்பது 90.69.இந்நிலையில் ஏற்கனவே 80 சதவீத அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கி,மேற்கண்ட 90 சதவீதத்தை எட்டும்படி செய்வர்.இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை!

Saturday, August 3, 2013

Mount Fuji

Mount Fuji of Japan


Mount Fuji of Japan

The Mount Fuji of Japan.

Fox

A Fox at The Oval of London in England.